ஆவணி மாதத்​தின் முதல் சுப​முகூர்த்த தினத்தை முன்​னிட்​டு, முரு​கன் கோயில்​களில் ஒரே நாளில் 300-க்​கும் மேற்​பட்ட திரு​மண விழாக்கள்!!

சென்னை:
ஆவணி மாதத்​தின் முதல் சுப​முகூர்த்த தினத்தை முன்​னிட்​டு, சென்னை மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் உள்ள முரு​கன் கோயில்​களில் நேற்று ஒரே நாளில் 300-க்​கும் மேற்​பட்ட திரு​மணங்​கள் வெகு விமரிசை​யாக நடை​பெற்​றன.

இதனால் கோயில்​களில் மக்​களின் கூட்​ட​மும், மேள தாளங்​களின் சத்​த​மும் விண்​ணைத் தொட்​டது. பொது​வாக, ஆடி மாதத்​தில் சுப நிகழ்ச்​சிகள் தவிர்க்​கப்​படும் என்​ப​தால், ஆவணி மாதம் பிறந்​தவுடன் திரு​மணங்​கள் நடத்த மக்​கள் ஆர்​வம் காட்​டு​வர்.

அந்த வகை​யில், ஆவணி மாதத்​தின் முதல் முகூர்த்த நாளான நேற்​று, அதி​காலை முதலே கோயில்​களில் திருமண ஜோடிகளின் வருகை அதி​கரித்​தது.

இறைவனின் சந்​நி​தானத்​தில் இல்லற வாழ்​வைத் தொடங்​கி​னால் மகிழ்ச்​சி​யும் நீண்ட ஆயுளும் கிடைக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் ஏராள​மானோர் கோயில்​களைத் தேர்ந்​தெடுத்​தனர்.

அந்​தவகை​யில், சென்​னை​யில் மிக​வும் பிரசித்தி பெற்ற வடபழனி முரு​கன் கோயி​லில் நேற்று ஒரே நாளில் 64 ஜோடிகள் மணமுடித்​தனர்.

மண்​டபங்​கள் நிரம்​பிய​தால் கோயில் வளாகத்​திலேயே அடுத்​தடுத்து திரு​மணங்​கள் நடை​பெற்​றன.

அறு​படை வீடு​களில் ஒன்​றான திருத்​தணி​யில் சென்னை மற்​றும் அண்டை மாவட்​டங்​களைச் சேர்ந்த 78 ஜோடிகளுக்கு திரு​மணம் நடை​பெற்​றது.

சென்னை புறநகரில் உள்ள திருப்​போரூர் கந்​த​சாமி கோயி​லில் பதிவு செய்யப்பட்டு 90 திருமணங்களும், பதிவு செய்யப்படாமல் 50 திருமணங்களும் என ஒரே நாளில் 140 ஜோடிகள் திரு​மணம் செய்​தனர்.

குன்​றத்​தூர் முரு​கன் கோயி​லிலும் வழக்​கத்தை விட 60-க்​கும் மேற்​பட்ட திரு​மணங்​கள் நடை​பெற்​ற​தால் கூட்​டம் அலைமோ​தி​யது. வல்​லக்​கோட்டை முரு​கன் கோயி​லில் 33 ஜோடிகளுக்கு திரு​மணங்​கள் விமர்​சை​யாக நடை​பெற்​றன.

இதே​போல், சென்னை மற்​றும் புறநகரில் உள்ள முரு​கன் கோயில்​களில் நேற்று மொத்​த​மாக சுமார் 250-க்​கும் மேற்​பட்ட திரு​மணங்​கள் நடை​பெற்​றது.

ஒரே நாளில் நூற்​றுக்​கணக்​கான திரு​மணங்​கள் நடை​பெற்​ற​தால், மணமக்​களின் உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​கள் என ஆயிரக்​கணக்​கானோர் கோயில்​களில் திரண்​டனர்.

இதன் காரண​மாக வடபழனி, திருத்​தணி மற்​றும் திருப்​போரூர் பகு​தி​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. வாக​னங்​கள் நீண்ட வரிசை​யில் ஊர்ந்து சென்​றன.

கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி அசம்​பா​விதங்​கள் ஏதும் நடக்​காமல் தடுக்​க​வும், கூட்​டத்தை ஒழுங்​குபடுத்​த​வும் கூடு​தல் காவல்​துறை​யினர் மற்​றும் கோயில் பாது​காப்​புப் பணி​யாளர்​கள் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

சில இடங்​களில் போ​திய முன்​னேற்​பாடு​கள் இல்லை என்ற புகார்​கள் எழுந்​தா​லும், மேள தாளங்​கள் மற்​றும்​ நாதஸ்​வர இசை​யுடன்​ கோயில்​கள்​ விழாக்​கோலம்​ பூண்​டிருந்​தன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *