ஆம்ஸ்டல்வீன்:
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று ஆடவர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய அணி, அர்ஜெண்டினாவுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் குறைந்தபட்சம் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறலாம் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்கியது.
ஆனால் இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
அர்ஜெண்டினா அணிக்காக டோமஸ் டொமேனே (33, 45-வது நிமிடங்கள்), ஜோவாகின் தோஸ்கானி (1, 53-வது நிமிடங்கள்) ஆகிய இருவரும் தலா 2 கோல்களை அடித்தனர்.
மற்றொரு கோலை 6-வது நிமிடத்தில் நிக்கோலஸ் டெல்லா தோரே அடித்தார்.
இந்திய அணி சார்பில் சுக்ஜீத் சிங் 34 மற்றும் 58 நிமிடங்களில் ஃபீல்டு கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கை ஹர்திக் சிங் கோலாக மாற்றினார்.