தமிழ்​வழி​யில் படித்​தோருக்கு மு்ன்​னுரிமை ஒதுக்​கீடு வழங்​கும் சட்​டத்​தின் கீழ் ஒரு நபர் ஒரு​முறை மட்​டுமே சலுகை பெற முடியும்; ஆளுநர் ஒப்​புதல்!!

சென்னை:
தமிழ்​வழி​யில் படித்​தோருக்கு மு்ன்​னுரிமை ஒதுக்​கீடு வழங்​கும் சட்​டத்​தின் கீழ் ஒரு நபர் ஒரு​முறை மட்​டுமே சலுகை பெறும் வகை​யில் கொண்​டு​வரப்​பட்ட சட்​டத்​திருத்த மசோ​தாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசின் சட்​டத்​துறை செயலர் பி.சுமதி ஆகஸ்ட் 11-ம் தேதி​யிட்ட சிறப்பு அரசிதழில் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​வழி​யில் படித்​தோருக்கு அரசுப் பணி​யில் முன்​னுரிமை வழங்​கும் சட்​டத்​திருத்த மசோ​தாவுக்கு (2026) ஆகஸ்ட் 6-ம்​தேதி தமிழக ஆளுநர் ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

இந்​தப் புதிய சட்​டத்​தின்​படி தமிழ்​வழி​யில் படித்​தோருக்​கான 20 சதவீத முன்​னுரிமை ஒதுக்​கீட்டை ஒரு நபர் ஒரு​முறை மட்​டுமே பெற முடி​யும்.

ஏற்​கெனவே தமிழ்​வழி இடஒதுக்​கீட்​டில் அரசுப் பணி​யில் சேர்ந்​தவர்​கள் மீண்​டும் இந்த ஒதுக்​கீட்​டின்​கீழ் பயன்​பெற முடி​யாது.

இந்​தப் புதிய சட்​டம் தொடர்​பான அறிவிக்கை அரசிதழில் வெளி​யிடப்​படு​வதற்கு முன்​னர் (அதாவது ஆகஸ்ட் 11-க்கு முன்பு) மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்​களுக்கு இந்த சட்டத்திருத்தம் பொருந்​தாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

தமிழ்​வழி​யில் பயின்​றோருக்கு அரசுப் பணி​யில் 20 சதவீத இடஒதுக்​கீடு அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இச்​சலுகையை பெறு​வதற்​கு, குறிப்​பிட்ட அரசுப் பணிக்கு நிர்​ண​யிக்​கப்​படு்ம் கல்​வித்​தகு​தியை 1-ம் வகுப்​பில் இருந்து தமிழ்​வழி​யில் படித்​திருக்க வேண்​டியது அவசியம்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *