காணவில்லை என்று 2 நாட்களாக தேடப்பட்டுவந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் ஏரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், இறந்தால் காரணம் என சிலரின் பெயர்களை ஏப்ரல் 30 ம் தேதியே KPK ஜெயகுமார், மாவட்ட எஸ்.பி. க்கு புகார் அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.