மத்திய அரசு உடனடியாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

சென்னை:
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செப்.28 முதல் 30-ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் இருக்காது.

இதனால் வங்கி வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிவதில் தடையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *