மோடி தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம் : அடுத்த பிரதமர் யார்…!

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் இன்று (5) காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி (bharatiya janata party) மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தனித்து 240 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது.

எனவே மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

இந்த கூட்டத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *