மெத்தையில் கட்டுக்கட்டாக பணத்தை அள்ளிப்போட்டு, கழுத்து நிறைய நகைகளுடன் இன்ஸ்டாகிரா மில் பகட்டாக ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை!!

நாகர்கோவில்,
மெத்தையில் கட்டுக்கட்டாக பணத்தை அள்ளிப்போட்டு, கழுத்து நிறைய நகைகளுடன் இன்ஸ்டாகிராமில் பகட்டாக ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதில் இருந்து அதை போலவே பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டது. இதையடுத்துதான் இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டது.

முழுக்க முழுக்க ஷார்ட் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி கொண்டதாக இது உருவாக்கப்பட்டது. தற்போது இணைய உலகில் ரீல்ஸ் புதிய டிரெண்ட் அடித்துள்ளது. பலர் இந்த ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் மாவட்டம் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 36). இவர் ஏலக்காய் மொத்த வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி மதுமிதா (வயது 29), இவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து அவ்வபோது எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்களுக்கு லைக்குகள் சும்மா அள்ளி கொண்டு போகுமாம்.

இந்தநிலையில், மதுமிதா தான் வாங்கும் புதிய தங்க நகைகள், வீட்டில் இருக்கும் கட்டுக்கட்டான பணம் மற்றும் தாங்கள் எங்கு செல்கிறோம் போன்ற அனைத்து விவரங்களையும் தொடர்ந்து ரீல்ஸாக வெளியிட்டு வந்துள்ளார்.

மேலும் கழுத்து நிறைய நகைகள் அணிந்து கொண்டும், கட்டுக்கட்டாக பணத்தை மெத்தையில் அள்ளிப்போட்டு கொண்டும் மதுமிதா டான்ஸ் ஆடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார்.

இவர்களது வீடியோக்களை தொடர்ந்து கண்காணித்து வந்த கொள்ளையர்கள் நேரம் பார்த்து இவர்களது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் ரூ.50 ஆயிரம் ரொக்கம் (இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி) கொள்ளையடித்து சென்றனர்.

வெளியே சென்று இருந்த தம்பதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில் சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்து கொள்ளையர்களைத் நகைகள், பணத்தை அள்ளி சென்றது தெரியவந்துள்ளது.

மதுமிதா பதிவிட்ட ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் வீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் தங்களது சுய விவரங்கள், வீடியோ க்கள் பகிரங்கமாக வெளியிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *