திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை!!

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை வேங்கிகால் தென்றல் நகர் பகுதியில் உள்ள திருவண்ணாமலை மக்களவை தொகுதி உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீட்டில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென 15-க்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சி.என்.அண்ணாதுரை கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருவண் ணாமலை மக்களவை உறுப்பினராக பதிவி வகித்து வருகிறார். அவர் தனது குடும்ப உறுப்பினர் மூலம் ஏபியு கண்ஸ்டரக்‌ஷன்(APU CONSTRUCTION ) என்ற பெயரில் அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார்.

இதன் மூலம் பல கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஒப்பந்தம் எடுத்து பல்வேறு பணிகளை செய்து வருவதால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திரு ப்பதாகவும், திருவண்ணாமலை அடுத்த மலப்பம்பாடி ஏரியில் மண் அள்ளப்பட்டதில் இவருக்கு சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மற்றும் வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று காலை முதல் அவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *