செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை வெளியேற் றிவிட்டு, பட்டீஸ்வரம் காவல் நிலைய கதவுகளை ஆய்வாளர் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது!!

கும்பகோணம்:
செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை வெளியேற்றிவிட்டு, பட்டீஸ்வரம் காவல் நிலைய கதவுகளை ஆய்வாளர் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திருடு போனதாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.

இதனிடையே, பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த கோபு (36) என்பவர் தனது நண்பர் வீட்டு திண்ணையில் இருந்த சிலிண்டர் திருட்டுப் போனதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் செப்.24-ம் தேதி நள்ளிரவு பட்டீஸ்வரம் போலீசார் ஆற்று பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கும்பகோணம் மூங்கில் தோப்பைச் சேர்ந்த கந்தவேல் (26) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, அவர் கூலி வேலை செய்து வந்தவர் என்றும் அண்மைக்காலமாக வீட்டில் இருக்கும் சிலிண்டர்களை திருடி வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி, பல்வேறு வீடுகளில் திருடி பதுக்கி வைத்திருந்த 26 சிலிண்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, போலீஸார் கந்தவேலை இன்று அதிகாலை கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 13 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், செய்தியாளர்கள் பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற நிலையில் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் செந்தில் குமார் காவல் நிலையத்திற்குள் யாரையும் அனும திக்க முடியாது, உங்களுக்கு தகவல்களை சொல்ல வேண்டிய‌ அவசி யம் இல்லை எனக்கூறி செய்தியாளர்களை வெளியேற்றி கதவை மூடினார்.

காவல் நிலையம் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும். பொதுமக்கள் எந்த நேரம் வந்தாலும் புகாரை பெற்று நடவடிக் கை எடுக்க வேண்டும், பொதுமக்களின் அவசர தேவைக ளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உள்ள காவல் நிலையத்தை எந்த சூழலிலும் பூட்டக்கூடாது என்ற நடைமுறை இருந்தும் அதனை கடைபிடிக்க வேண்டிய காவல் ஆய்வாளரே காவல் நிலையத்தை பூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பட்டீஸ்வரம் காவல் நிலையம் அருகில் தஞ்சாவூர்- விக்கிரவா ண்டி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ள நிலையில் அண்மை காலமாக வழிபறிகள் நடந்து வரும் நிலையில், இதுபோன்று காவல் நிலையத்தை பூட்டி வைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம் புகார் கொடுப்பது என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *