அடுத்தடுத்து அம்பலமாகி றது ‘தூய சக்தி’ தவெகவின் ஊழல்கள் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் விமர்சனம்!!

மதுரை:
“தேர்தலுக்கு முன்பு வரையிலும் தூய சக்தி என, பரப்புரை செய்த தவெக ஆட்சியில், டாஸ்மாக் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஊழல் குறித்த தகவலும் தற்போது வெளி வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசியல் வரலாற்றிலே ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் இடைத்தேர்தல் வந்துள்ளது.

தமிழக மக்களை தவறாக மதிப்பீடு செய்த தவெக-வினர், முதல்வர் விஜய் முகத்தை ஒருமுறை காண்பித்தால் போதும், வெற்றி என நினைத்த அக்கட்சிக்கு இடைத்தேர்தல் சவாலாக இருக்கிறது.

தேர்தல் களத்தில் சந்தித்த எதிர்ப்பின் மூலம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருந்ததால் தவெகவினர் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வேட்பாளரும், அமைச்சர்களும் பிரச்சாரத்திற்கு செல்லலாம் என்ற எடுத்த முயற்சி கடைசியில் தோல்வியில் முடிவடைந்தது.

துரோகம் செய்தவர்களை வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்தது தவறு என தவெகவினரே பேசிக் கொண்டதை நாம் களத்திலே பார்க்க முடிந்தது.

மொத்தத்தில் ரியாலிட்டியை மறந்துவிட்டு ரீல்ஸ் மூலம் ஆட்சிக்கு வந்த தவெக, இடைத்தேர்தல் மூலம் மக்கள் தொண்டின் முக்கியத்துவம், அவசியத்தை உணர்ந்துள்ளது.

ஜனநாயக கடமை ஆற்றிய அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு, விசாரணை என்ற பெயரிலே தேர்தல் பணியை முடக்க முயற்சித்தனர்.

தவெக ஆட்சியில் அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்சம், பணி முடிவடைந்தபின் ஒப்பந்தம் அறிவிப்பது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.70 வரை வசூலிப்பது, டாஸ்மாக் கடைகளிலே ரூ.10-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்து வசூலிப்பது, பொது விநியோக திட்டத்தில் கொள்முதல் செய்ய பாமாயில் போன்றவற்றில் ஊழல் என, ஒவ்வொரு ஊழலாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இடைத்தேர்தலில் விஜய்க்கு மக்கள் மரண பயத்தை காட்டிவிட்டனர்.

இடைத்தேர்தலில் ஆளும் அரசுக்கு எதிராக தீர்ப்பு அமையும் போதுதான், மக்களை மறந்து, விளம்பர வெளிச்சத்தில் தடுமாறும் ஆளும் அரசுக்கு கள நிலவர உண்மை யதார்த்தம் புரியும்.

அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வாபஸ் பெறுவது போன்ற இந்த ஆட்சி மர்ம ஆட்சியாகவே இருக்கிறது.

இந்த இடைத்தேர்தல் தீர்ப்பு ஒரு நல்ல பாடமாக, ஒரு நல்ல தீர்ப்பாக ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியை வலிமையடைய செய்யும் வகையில் வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்று உதயகுமார் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *