அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானை பதவியி​லிருந்து நீக்கி நாடு முழு​வதும் நடந்துவரும் போராட்​டங்​களை முடிவுக்கு கொண்​டுவர பிரதமர் மோடி முடி​வெடுக்க வேண்​டும் – மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியு றுத்தல்!!

சென்னை:
மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

மாணவர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​று​வதற்கு பதில் பல்​லா​யிரக்​கணக்​கான காவல்​துறை​யினர் மற்​றும் துணை ராணுவ படை​யினரை கொண்டு கொலை​வெறி தாக்​குதல் நடத்​து​வது, இணை​யதள இணைப்பை துண்​டிப்​பது, மெட்ரோ ரயில் நிலை​யங்​களை மூடு​வது என வேண்​டாத வேலைகளை​யெல்​லாம் பிரதமர் மோடி செய்​து​கொண்​டிருக்​கிறார்.

தர்​மேந்​திர பிர​தான் என்​கிற ஒரு அமைச்​சரை நீக்​கு​வ​தால் அவரது அரசு கவிழ்ந்​து​ விட போகிறதா என்ன?

எனவே, மத்​திய கல்​வித்​துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானை பதவியி​லிருந்து நீக்கி நாடு முழு​வதும் நடந்துவரும் போராட்​டங்​களை முடிவுக்கு கொண்​டுவர பிரதமர் மோடி முடி​வெடுக்க வேண்​டும்.

இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *