சென்னை:
“திமுக ஆட்சியில் ரூ.20-க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததை விமர்சித்த தவெக, ரூ.35-க்கு கொள்முதல் செய்கிறது.
தமிழகத்தில் தவெக ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்க ளாகியும், மின்வெட்டை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உச்சபட்சமாக தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டுப் பிரச்சினை ஏற்படுகிறது,” என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதல் மின்வெட்டு பற்றி பேசாத நாட்கள், செய்திகள் வெளிவராத நாட்கள் என ஒருநாள் கூட இல்லை. அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ் ச்சிகள், பட்டமளிப்பு விழாக்களில் கூட மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய நிர்வாகத் தோல்வியால் மக்கள் அவதியடைவது குறித்து இன்றைய டம்மி முதல்வருக்கு கவலையில்லை.
இவர், வெறும் ரீல்ஸை மட்டுமே முன்வைத்து, மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறார்.
உச்சபட்சமாக தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டுப் பிரச்சினை ஏற்படுகிறது.
மின்துறை அமைச்சர் அவருடைய துறையைத் தவிர மற்ற எல்லாத் துறை சார்ந்த கேள்விக ளுக்கும் பதில் சொல்வார். ஆனால், அவருடைய துறையில் கேள்வி கேட்டால் பதில் இருக்காது.
திமுக ஆட்சியின்போது எந்தவித தடையும் இன்றி சீராக மின்விநியோகம் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உச்சபட்ச மின்தேவை ஏற்படும் என்பதற்காக முன்கூட்டியே கணக்கெடுத்து, பொங்கலுக்கு முன்பாகவே ஒப்பந்தங்களை மேற்கொள்வோம்.
நம் சொந்த மின் உற்பத்தி ஆலையில் கோளாறு ஏற்பட்டால் மட்டும், அவசரத் தேவைக்காக பரிமாற்றம் முறையில் மின்சாரம் வாங்குவோம்.
ஆனால், இன்றைய தவெக அரசு முழுக்க முழுக்க வெளிச் சந்தையில் மின் கொள்முதல் செய்கிறது. தவெக அரசு வெளிப்படை இல்லாமல் இருக்கிறது.
ஏன் சொந்த உற்பத் தியை குறைத்தீர்கள். மின்சார வாரியம் முழுக்க முழுக்க முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ரூ.20-க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததை விமர்சித்த தவெக, ரூ.35-க்கு கொள்முதல் செய்கிறது.
தமிழகத்தில் தவெக ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்களாகி யும், மின்வெட்டு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதலில் ஃபியூஸ் கேரியர் காணவில்லை என்றார்கள், பிறகு கருப்பு ஆடுகள் என்றார்கள், தற்போது பஞ்சாப்பில் 15 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது என்கிறார்கள்.
இதுபோன்ற மோசமாக சூழ்நிலையில் தவெக செயல்படு கிறது. மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்வெட்டை அமல்படுத்தியுள்ள அரசாக தவெக அரசு உள்ளது.
திமுக அரசை குறை சொல்ல வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணம்” என்று செந்தில் பாலாஜி தெரிவித் துள்ளார்.