1,000 மெகாவாட் அளவுக்குத் தான் கொள்முதல் செய்யவு ள்ளோம் – அமைச் சர் நிர்மல் குமார் புதிய விளக்கம்!!

சென்னை:
“21,000 மெகாவாட் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.33 முதல் ரூ.35 வரை 1,000 மெகாவாட் அளவுக்குத்தான் கொள்முதல் செய்யவுள்ளோம்.

இதனால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்பது அரைவேக்காட்டுத்தனமானது,” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில், “பெரும்பாலான மாநிலங்கள் ரூ.30-க்கும் அதிகமாகத்தான் கொள்முதல் செய்கின்றன.

மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் ஊழல் செய்ய வழிவகையில்லை; உப்பூரில் மின் உற்பத்தி செய்ய ரூ.6,000 கோடி முதலீடு செய்த திமுக, அதனை செயல்படுத்தவில்லை.

21,000 மெகாவாட் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்பது அரைவேக் காட்டுத்தனமானது. உப்பூர் மின் உற்பத்தி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது மிகப்பெரிய குற்றம்.

மின் வாரியத்தில் 2013-ம் ஆண்டுதான் நீண்டகால ஒப்பந்தம் எல்லாம் போடப்பட்டது. 2013ஆம் ஆண்டுக்கு பிறகு நீண்டகால ஒப்பந்தத்தை தொடங்கவுள்ளோம்.

ரூ.33 முதல் ரூ.35 வரை 1,000 மெகாவாட் அளவுக்குத்தான் கொள்முதல் செய்யவுள்ளோம். நாளை முதல் அக்.31 வரை மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மின்சாரம் பயன்படுத்தப்படும்.

நமது சொந்த உற்பத்தி 5300 மெகாவாட் தான். தேவையான மின்சாரத்தை வெளியில் இருந்து வாங்குகிறோம். கூடுதலாக செலவு செய்யவிட்டால், தொழில் நிறுவனக்களுக்கு இதை விட அதிக இழப்பு ஏற்படும்.

செப்டம்பரில் மின் தேவை அதிகமாக இருந்ததால் மின் நிலையங்களை சீரமைக்க முடியவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *