”ராயன்” படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டு மாஸான அப்டேட் கொடுத்த படக்குழு!!

2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர். தற்பொழுது படத்தின் பெரிய அப்டேட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

படத்தின் முதல் பாடல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர் அதில் தனுஷ் நெருப்பில் எரியும் கற்கள் மீது உட்கார்திருக்கிறார் அவருக்கு பின் 10 தலைக்கொண்ட ராவணனன் உருவசிலை இருக்கிறது.

இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *