தீவிர​வாதத்தை ஒழிப்​ப​தில் இரட்டை நிலைப்​பாடு கூடாது; ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் தலை​வர்​கள் குழுக் கூட்​டத்​தில் உரையாற்​றிய மத்​திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

துஷான்பே:
ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் தலை​வர்​கள் குழுக் கூட்​டத்​தில் உரையாற்​றிய மத்​திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிர​வாதத்தை ஒழிப்​ப​தில் இரட்டை நிலைப்​பாடு கூடாது என தெரி​வித்​தார்.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்சிஓ) தலை​வர்​கள் குழுக் கூட்​டம் தஜி​கிஸ்தானின் துஷான்பே நகரில் நேற்று முன்​தினம் தொடங்​கியது.

இதில் கலந்து கொள்​வதற்​காக மத்​திய பாதுகாப்புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் 2 நாள் பயண​மாக நேற்று முன்​தினம் தஜி​கிஸ்​தான் சென்​றார். 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற கூட்​டத்​தில் ராஜ்​நாத் சிங் உரையாற்​றினார்.

பாகிஸ்​தான் துணைப் பிரதமரும் வெளி​யுறவு அமைச்​சரு​மான இஷாக் தார் பங்​கேற்​றிருந்த அக்​கூட்​டத்​தில் ராஜ்​நாத் சிங் பேசியதாவது:

வளர்ச்​சிக்​கான மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்​றாக தீவிர​வாதம் விளங்​கு​கிறது. அது உயிர்​களுக்கு மட்​டுமல்ல, முதலீடு மற்​றும் வர்த்​தகத்​துக்​கும் தீங்கு விளை​விக்​கிறது.

தீவிர​வாதம் சமூகங்​களைத் தீவிரமயப்​படுத்​து​வதோடு, நமது இளைஞர்​களுக்கு வாய்ப்​பு​களை மறுக்கிறது. ஆகவே, தீவிர​வாதத்​துக்கு எந்த நியாயமும் இருக்க முடி​யாது.

அதை ஒழிப்​ப​தில் இரட்டை நிலைப்​பாடு இருக்​கக்​கூடாது. தீவிரவாதி​களுக்கு நிதி​யுதவி அளித்து ஆதரவளிப்​பவர்​களுக்​கும், அவர்​களுக்​குப் புகலிடம் வழங்​குபவர்​களுக்​கும் இடமளிக்​கக்​கூடாது.

தீவிர​வாதத்​தின் ஒட்​டுமொத்த சூழலமைப்​பும் வலுவாகவும் கூட்​டாகவும் முடிவுக்​குக் கொண்​டுவர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

முன்​னதாக, செப்​டம்​பர் மாதம் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் கூட்​டத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி, “தீவிரவாத செயலுக்கு நிதி​யளித்​தல், ஆள்​சேர்ப்பு, தீவிரமயப் படுத்​து​தல் மற்​றும் புகலிடம் அளிப்​பதை நாம் தகர்க்க வேண்​டும்” என வலியுறுத்தியிருந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *