தீபாவளி வரை எந்​தப் போராட்​டங்​களை​யும் நடத்தும் திட்​டம் இல்லை ; அனைவரும் குடும்​பத்​தினருடன் பண்​டிகையை கொண்​டாட வேண்​டு்ம் – சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவிப்பு!!

புதுடெல்லி:
தீபாவளி வரை எந்​தப் போராட்​டங்​களை​யும் நடத்தும் திட்​டம் இல்லை என்​றும் அனைவரும் குடும்​பத்​தினருடன் பண்​டிகையை கொண்​டாட வேண்​டு்ம் என்​றும் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே தெரி​வித்​துள்​ளார்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் (எஸ்ஐஆர்) குளறு​படி நடந்​த​தாகக் கூறி, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மற்​றும் எதிர்க்​கட்​சி​யினர் டெல்​லி​யில் தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சிஜேபி நிறு​வனர் அபி​ஜித் திப்கே நேற்று கூறியதாவது: டெல்​லி​யில் கடந்த சில நாட்​களாக நடை​பெற்ற சம்பவங்​களால் தொண்​டர்​கள் குடும்​பத்​தினர் கவலையடைந்துள்ளனர்.

குறிப்​பாக, எனது பெற்​றோரும், சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரின் பெற்​றோரும் கவலை​யில் உள்​ளனர்.

எனவே, தீபாவளி வரை எந்​தப் போராட்​டங்​களை​யும் நடத்​தும் திட்டம் இல்லை.

சில நாட்​களுக்கு உங்​கள் அன்​புக்​குரியவர்களுடன் நேரத்​தைச் செல​விடுங்​கள். குடும்​பத்​தினருடன் பண்​டிகையை கொண்​டாடுங்​கள்.

மேலும், சிஜேபி நிர்​வாகி​களை சிறை​யில் அடைத்து வைப்பதற்காக பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அரசு ஒட்​டுமொத்த அரசு இயந்​திரத்​தையும் பயன்​படுத்து​கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்​கிடையே, டெல்​லி​யின் மந்​திர் மார்க் காவல் நிலை​யத்​தில் புதிதாக நியமிக்​கப்​பட்ட சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்​னிலை​யில், நேற்று முன்​தினம் ஆஜர்​படுத்​தப்​பட்ட ரங்கா, தாஸ் ஆகியோரின் நீதி​மன்​றக் காவல் மேலும் 2 நாட்​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *