முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

கிறைஸ்ட்சர்ச்:
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் நமன் திர் ஆகியோர் அபாரமாக ஆடி இருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்த தொடரில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன.

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியாக டி20 ஆட்டம் இன்று (அக்.22) நியூஸிலாந்தில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 82, ஃபின் ஆலன் 45, பெவன் ஜேக்கப்ஸ் 31, டேரில் மிட்செல் 28, டிம் செய்ஃபெர்ட் 24 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 8 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.

கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 28 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். நமன் திர் 15 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார்.

அவரது ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிகரமாக எட்டிய அதிகபட்ச ரன்களாக‌ இந்த ஆட்டத்தின் 226 ரன்கள் அமைந்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா இப்போது முன்னிலை பெற்றுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *