என்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றியது சுந்தர் .சி சார் தான் – மாளவிகா!!

இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி யின் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த சூழலில் சுந்தர் சி தனது ரசிகர்களை சந்தித்து பேசிய நிகழ்ச்சி ஒன்று தனியார் யூட்யூப் சேனலில் வெளியானது.

இந்த ஃபேன்ஸ் மீட்டில் விமல், மிர்ச்சி சிவா, ஹிப்பாப் ஆதி ஆகியோர் வீடியோ மூலமாக சுந்தர் சி-க்கு கேள்வி எழுப்பினர். அப்போது சுந்தர் சி மிகவும் கலகலப்பாக தனது பதிலை பதிவு செய்தார். அதேபோல் நடிகை மாளவிகா, என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது சுந்தர் .சி சார் தான். என்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றியதும் அவர்தான். எனக்கு அவர்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் .

அவர் சினிமாவில் அறிமுகப்படுத்துனதுல சுந்தர் .சி சாருக்கு பேவரிட் யார் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுந்தர்.சி, அவங்களுக்கு மாளவிகா என்று பெயர் வைத்ததினால் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் பெரிய சண்டை ஆயிடுச்சு. ஏன்னா குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசித்து என்னுடைய மனைவி மாளவிகா என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தார்.

ரெண்டு நாளா புக்குல தேடி பெயரை செலக்ட் பண்ணி வச்சிருந்தாங்க. நானும் சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டேன். தேவா சார் கூட கம்போசிங் வேலைக்காக நான் இருந்தபோது, ஹீரோயின் பேரில் பாட்டு இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு நான் சொல்ல, அவர் வெவ்வேறு பேர்ல பாட்டு சொல்லியும் செட் ஆகல. ஏதாவது ஒரு நல்ல பெயர் தான் சொல்லுங்க என்று அவர் என்கிட்ட கேட்டார். டக்குனு நான் மாளவிகான்னு சொன்னேன்.

அதிலேயே அவரது பாட்டு பாட எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. பாட்டுல அந்த பெயர் வரவும் ஹீரோயினுக்கும் அதே பெயரை வச்சிட்டோம் . இப்படி மாளவிகா பெயரால் தனக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த சண்டையை சுந்தர் .சி கலகலப்பாகப் சொல்ல அவரது ரசிகர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், நடக்க கூட தெரியாமல் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் வந்தவர் மாளவிகா. டான்ஸ் எல்லாம் அவருக்கு சுத்தமா ஆட தெரியாது. ஆனால் பின்னால் அவர் பெரிய டான்ஸர் ஆகிட்டாங்க. ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிச்சிருந்தாங்க. அப்ப அவங்க நடந்து வரும்போது நான் பூ போடுவேன்.

அப்ப நான் சொன்னேன், உன்னை அறிமுகப்படுத்தின பாவத்துக்கு நான் என்னென்ன பண்றேன் பாருன்னு சொன்னேன். மற்றபடி மாளவிகா ரொம்ப வெகுளியான, தங்கமான பொண்ணு நான் அறிமுகப்படுத்தியதுல் எனக்கு பிடிச்ச ஹீரோயின் நீங்கதான் என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *