தமிழ்நாடு முழுவதும், 8,94,264 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியதில், 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.
பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம்
- தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் – 96.85%
- ஆங்கிலம் – 99.15%
- கணிதம் – 96.78%
- அறிவியல் – 96.72%
- சமூக அறிவியல் – 95.74
பாடவாரியாக 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை:
1.தமிழ் – 8
2.ஆங்கிலம் – 415
- கணிதம் – 20,691
- அறிவியல் – 5,104
5.சமூக அறிவியல் – 4,428