”கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 30ஆயிரம் சிறுமிகள் கருத்தரிப்பு” – பதியப்படாத போக்ஸோ வழக்குகள்!!

மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா காலத்தின் போது லாக்டவுனில் ஏராளமான குழந்தை திருமணங்கள் நடைபெற்றன. அதே சமயம் மூன்றாண்டு களில் 30, 000க்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் அடைந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் பெரும்பாலும் போக்ஸோ வழக்குகளாக அவை பதிவாகவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் பல்வேறு திருமணங்கள் எளிமையாகவும் , ரகசியமாகவும் நடைபெற்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றது.

குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் படி 18 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 21 வயது குறைவான சிறுவர்கள் திருமணம் செய்வது சட்ட விரோதமானவை. கொரோனா காலகட்டத்தில் லாக்டவுனை பயன்படுத்தி குழந்தை திருமணங்கள் அதிகரித்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. தேசியக் கூற்று ஆவண காப்பகத்தின் அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 30ஆயிரம் சிறுமிகள் கருத்தரித்து இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாக்காலம் தொடங்கி தற்போது வரை 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் அடைந்த நிலையில் இவற்றில் பல வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

2021 ஆம் ஆண்டில் இளம் வயது திருமணங்கள் அதிகரித்த நிலையில் வீட்டிலேயே இளம் வயது சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தெரியவந்துள்ளது 30,000 இளம் வயது சிறுமிகள் கர்ப்பம் அடைந்த நிலையில் 13000 கோக்சோ வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. சுகாதாரத் துறையினருக்கு போக்சோ வழக்கு குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பயிற்சி மட்டும் கட்டண விழிப்புணர் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *