மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான்!!

லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும்.

செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

கோலங்களில் பல வகைகள் உள்ளன. அவை மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி, நடுவீட்டுக் கோலம், பின்னல் கோலம் என்றெல்லாம் இருக்கின்றன. அதிகாலையில் வீட்டு முகப்பில் சாணம் தெளித்து கோலம் போட்டால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அவரவர் இல்லங்களில் அவரவர்களே கோலமிடுவது மிகவும் சிறப்பு.

முன்காலத்தில் தமிழர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, காலைக் கடன்களை முடித்து குளித்து, அதன்பிறகு வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவது வழக்கம். வாசல் தெளிக்கும் போது முன்பெல்லாம் சாணம் தெளிப்பார்கள்.

சாணம் ஒரு கிருமி நாசினி. செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணங் களை வாசலின் நிலைப்படியில் கட்டுவார்கள். கிருமிகளை ஈர்க்கக்கூடிய ஆற்றலும் உண்டு.

காலையில் பெண்கள் குனிந்து கோலமிடுவதன் மூலம் உட ற்பயிற்சியோடு, நல்லதொரு கோலக்கலையும் வளர வழிவகுத்தனர். பண்டிகை தினங்களான புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் வண்ணக் கோலம் இடுவதும் நம் வழக்கம்.

கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டிற் குள் கிருஷ்ணர் அடியெடுத்து வைப்பது போல சிறிய பாதங்களை வரைவார்கள். வீதியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதக் கோலம் வரையப்படும். நம்வீட்டில் நடக்கும் பூஜையை கண்ண பரமாத்மா வந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை.

மாதங்களிலேயே மார்கழி மாதத்தில்தான் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின் றோம். மற்ற மாதங்களில் மக்கள் கோலத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் அலங்கோலமான வாழ்வை மாற்றுவது மாக்கோலமிட்டு செய்யப்படும் வழிபாடுதான் என்பதை அனுபவத்தில் தான் உணர முடியும்.

`கோலம்’ என்றால் ‘அழகு’ என்று பொருள். வீட்டை அலங்கரித்தால் மகிழ்ச்சியும் குடியேறும். மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான். நமது வாழ்வில் சகல நாட்களும் சந்தோஷம் பெருக வேண்டுமானால், அன்றாடம் சமையலறையில் அடுப்பிற்கு கோலம் இட வேண்டும்.

துளசி மாடத்தின் முன்பும், வீட்டின் முன் வாசலிலிலும் கோலம் இட வேண்டும். அடுப்பில் கோலமிட்டு அன்னலட்சுமியை வரவேற்றால், அஷ்டலட்சுமிகளும் தாங்களாகவே வந்துசேர்வார்கள்.

இதயக் கமலம், ஐஸ்வரியக் கோலங்கள் இடும்பொழுது கண்டிப்பாக கால்களில் மிதிக்கக் கூடாது. பொதுவாக யாருமே கோலத்தை மிதிக்கவோ. அழிக்கவோ கூடாது. கோலத்தை நாம் மங்கலமாகக் கருதி கொண்டாட வேண்டும். கோலம் இடுவதில் அழகும் இருக்கிறது, புண்ணிய மும் சேர்கிறது.

கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவை உபயோகப்படுத்துவது நல்லது. அதாவது நாம் அரிசி மாக்கோலம் போடும் பொழுது, அந்த அரிசி மாவை எறும்புகள் மற்றும் ஊர்வன சாப்பிடுவதன் மூலம் அன்னதானம் செய்த பலன் நமக்கு கிடைத்து புண்ணியம் வந்து சேரும்.

எனவே லட்சுமி இல்லத்தில் குடியேற ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வீட்டு முகப்பில் அழகிய கோல மிட்டு வரவேற்போம். ஆரோக்கியமான வாழ்வும். செல்வச் செழிப்புமிக்க வாழ்வும் அமைய வழிவகுப்போம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *