நாகராஜா கோவிலில் பயபக்தியுடன் நயன்தாரா , விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!!

நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இதன் பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நயன்தாரா தம்பதியினரை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தம்பதியினர் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர். அங்குள்ள ஆஞ்ச நேயரையும் வழிபட்டனர்.

பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வந்தனர். நாகராஜா கோவிலில் பயபக்தியுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு சென்ற நடிகை நயன்தாரா நெற்றியில் திருநாமம் இட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டார். விக்னேஷ்சிவன் தலையில் தலைப்பாகையுடன் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து இருவரும் பதியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தனர். நயன்தாராவுடன் அங்கிருந்த குழந்தைகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நயன்தாராவை காண பதியின் வெளியே ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து நயன்தாரா கையசைத்தவாறு சென்றார்.

பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாகராஜா, சூரிய பகவான் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் நயன்தாரா தனது குழந்தைகள் பேரில் அர்ச்சனை செய்தார். சாமி தரிசனத்திற்கு வந்த நயன்தாராவிற்கு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார். பின்னர் கோவில் அலுவலகத்தில் நயன்தாரா பேசிக்கொண்டிருந்தார். பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரத்திற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர்கள் முண்டியடித்து கொண்டு நயன்தாராவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு கோவிலுக்கு வெளியே உள்ள கடைகளுக்கு சென்று பேன்சி பொருட்களை நயன்தாரா வாங்கி சென்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *