பெண் காவலர்களை தன்னுடன் அனுப்பியதால் பொய்யான தகவல்களை சவுக்கு சங்கர் கூறியதாக காவல்துறை தகவல்!!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார், சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது.

இதனிடையே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, சவுக்கு சங்கர் தற்போது திருச்சி அழைத்து செல்லப்பட்டார்.

கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டியுள்ளார். போலீசார் தாக்கியதாக சவுக்கு சங்கர் கூறிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சவுக்கு சங்கருக்கு காயம் உள்ளதா என்பதை மருத்துவர்கள் சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் கூறிய விவகாரத்தில் மருத்துவமனையில் வைத்து பரிசோதித்ததில் அவருக்கு உள்காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. பெண் காவலர்களை தன்னுடன் அனுப்பியதால் பொய்யான தகவல்களை சவுக்கு சங்கர் கூறியதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *