மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன எழுச்சி நாள் நிகழ்வு இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு பெண் என்னை கடந்த 15 ஆண்டுகளாக தவறாக பேசிக் கொண்டிருந்ததை அரசும் , எல்லா ஊடகவியலாளர்களும் கவலைப்படாமல் கொண்டாடிக் கொண்டிருந்தீர்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு.. எனக்கும் 2 பசங்க இருக்கிறார்கள்..
எனக்கு மனைவி, அம்மா, அப்பா, மாமியார் என எல்லோரும் இருக்கிறார்கள்.. ஆனால் அது குறித்து யாருக்கும் கவலையில்லை. பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது.. அந்த கைது நடவடிக்கையை நான் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் குண்டர் சட்டம் போடும் அளவுக்கு இந்த பிரச்சனை ஒன்றும் பெரிதல்ல என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , 2026-ல் நானும், என் தம்பி விஜய்யும் ஒன்று சேருவதற்கு காத்திருக்கிறேன்; தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன்.
அண்ணனும் தம்பியும் சந்திப்பது வழக்கம்; அப்படிதான் விஜய்யும், நானும் சந்திப்பது இருக்கும். நாட்டில் பிரச்சனையே அண்ணனும், தம்பியும் சேர கூடாது என்பது தான், 2026 கூட்டணி குறித்து வெயிட்டிங் என்றார்.
