நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக மக்களவைத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.
இந்த சூழலில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு, பிரதமர் வேட்பாளர் என்பது தேர்தலுக்கு முன்பு தேவையில்லை என்று பதிலளித்திருந்தார் .இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராகுல் காந்தி வீடியோவை வெளியிட்டு , நான் பார்த்த நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார் .
நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி இடம்பெற்றுள்ளது. அதிமுக தேசிய அளவில் பாஜக கூட்டணியிலும், இந்தியா கூட்டணியிலும் இடையாமல் தனித்து களம் கண்டுள்ளது. இந்த சூழலில் ராகுல் காந்தியை செல்லூர் ராஜு புகழ்ந்து வீடியோ வெளியிட்டு இருப்பது அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.