“சொகுசு காரில் கஞ்சா ” போலி அடையாள அட்டை, போலீசில் சிக்கிய பெண்..!! அதிர்ச்சி தகவல்…

கோவை:

கோவையில் காரில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த போலி அடையாள அட்டைகள் மற்றும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கோவை வடவள்ளி அருகே நேற்றிரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்த போது, TN41AC 7000 என்ற பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில் திருப்பூர் மாவட்டம் நம்பியாம்பாளையத்தை சேர்ந்த ஜெயமணி (39) என்பவர் போலி அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு,  கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இவர் அமமுக நிர்வாகி என்று கூறப்படுகிறது. மேலும் இவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, ஊசிகள், சிஐடி அதிகாரி என்பதற்கான போலி அடையாள அட்டை, போலி வருமான வரி அதிகாரி அட்டை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த வடவள்ளி காவல்துறையினர், ஜெயமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.