முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை, விஜய் நேரில் சந்திக்கும் விழா ஜூன் 15 – 20ம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டும் ஊக்கத்தொகை வழங்குகிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் இந்த ஆண்டும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரை அழைத்து கல்வி விருது விழா நடத்தவுள்ளார்.

அதில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்ட உள்ளார். கடந்த முறை நடிகராக மட்டும் கல்வி விருது விழாவை நடித்திய விஜய் இந்த ஆண்டு அரசியல் தலைவராக கல்வி விருது விழாவை நடத்துகிறார்.

இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாஸ் வழங்கும் பணி தொடங்கியது.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்கும் விழா ஜூன் 15 – 20ம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *