‘கருடன்’ திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார் சூரி. அதைத் தொடர்ந்து வெளியாகும் கருடன் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதி இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சூரி மிகவும் கோவத்துடனும், வெறியுடனும் காணப்படுகிறார்.
சூரி எப்பேற்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.