மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
வைகோவிற்கு சென்னையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. வைகோ விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவ சிகிச்சை நடைபெற்று, விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , எம்.பி.யுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.