ரயில் பயணிகளுக்கு அனைத்து விதமான சாப்பாடு இலவசம்..!

ரயில் பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் இந்திய ரயில்வே மூலம் செய்து தரப்படுகிறது. ஆனால் நிறையப் பேருக்கு இதுபற்றித் தெரிவதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால் ரயில் பயணிகள் இதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றனர்.

நீங்களும் அடிக்கடி ரயில்களில் பயணம் செய்பராக இருந்தால் இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரயில் பயணிகளுக்கு பல இலவச வசதிகளை இந்திய ரயில்வே வழங்குகிறது. அதை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் நீங்களும் ரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் நீங்களும் இந்த வசதியப் பயன்படுத்தி இலவசமாக உணவை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து பயணிகளுக்கும் இந்த வசதி கிடைக்காது. குறிப்பிட்ட பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

சில நேரங்களில் ரயில்கள் தாமதமாக வரும். அவ்வாறு நீங்கள் செல்ல வேண்டிய ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே தரப்பில் இருந்து உங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும்.

நீங்கள் செல்ல வேண்டிய ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால் இந்த வசதி உங்களுக்கு வழங்கப்படும். இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் பயணிக்கும் மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

மேலும் இந்த வசதியானது ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால் மட்டும் பொருந்தும். அதுபோல இந்த வசதி Express Train பயணிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.

இதன்படி பயணிகள் உணவை கேட்டுப் பெறலாம். சைவமா அசைவமா என்பதை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இதுபோல சிற்றுண்டியா, சாப்பாடா என்பதையும் அவர்களே தேர்வு செய்யலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *