கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று” – பிரதமர் மோடி!!

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விவேகானந்தர் நினைவு பாறை பதிவேட்டில் தனது தவம் குறித்து குறிப்பிட்டு பிரதமர் மோடி, “எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும், என் உடலின் ஒவ்வொரு துகளும் தேசத்தின் சேவைக்காக எப்போதும் அர்ப்பணிக்கப்படும் என்று மீண்டும் ஒருமுறை உறுதி அளிக்கிறேன்.

ஆன்மிக மறுமலர்ச்சியின் தூண்டுகோலான விவேகானந்தர் என்னுடைய வழிகாட்டியாகவும் என் தவத்தின் ஆதாரமாகவும் இருந்துள்ளார். சுவாமி விவேகானந்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்திற்கு வந்து தியானம் செய்தபோது, ​​இந்தியாவின் மறுசீரமைப்புக்கு ஒரு புதிய திசையைப் பெற்றார்.

விவேகானந்தரின் லட்சியங்களைப் பின்பற்றி நமது கனவுகளின் இந்தியா வடிவம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் திருவள்ளுவர் சிலை பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, “சமூகத்தின் கடமை, நெறிமுறைகளை பற்றிய ஆழமான கருத்துகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை வென்றது திருக்குறள். திருக்குறளை பல்வேறு மொழிகளில் வெளியிடும் பாக்கியம் தனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.

வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்பும் எங்களது நோக்கத்திற்கு வள்ளுவரின் குறள்கள் உத்வேகத்தை தருகிறது. உலகளாவிய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை இந்தியா முன்மொழிய, வள்ளுவரின் போதனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *