இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியவர் கலைஞர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி-யின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “தலைவரே பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம்; இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியவர் கலைஞர்; அதிகாரத்தால் அல்ல, அன்பால் போற்றப்படும் தலைவர் கலைஞர். இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியவர் கலைஞர்.

தலைவர்களுக்கெல்லாம் தலைவர்.. முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்.. கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர். நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி. நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி. ஒரு ரூபத்தில் வாழ்ந்த பல ரூபம் ‘கலைஞர்’ நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்துவருகிறேன்.

நீங்கள் கனவு கண்ட கம்பீர தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *