ஹீரமண்டி தொடரின் இரண்டாம் பாகம் – ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் !!

ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் விஷ்வல்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத்.

இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகியது.

சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்த நெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. சீரிஸ் வெளியாகி மக்களிடையே நல்லம் வரவேற்பை பெற்றது.

சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.’ சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது. 43 நாடுகளில் ஹீரமண்டி தொடர் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹீரமண்டி சீசன் -2 வை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளார். லாஹுரில் இருந்து வெளியேறிய பெண் திரைத்துறை உலகத்திற்கு வருகிறாள். லாஹூர் பிரிவினைக்கு பிறகு பஸாரில் உள்ள பெரும்பாலான பெண்கள் மும்பை மற்றும் கொல்கத்தா திரைத்துறைக்குதான் வந்தடந்தனர், இங்கு நவாபுகளுக்கான ஆடிய பெண்கள் திரைத்துறையில் தயாரிப்பாளர்களுக்காக ஆடினார்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் அதை மையமாக வைத்து ஹீரமண்டி சீசன் 2 வை இயக்கவுள்ளதாக சஞ்சய் கூறியுள்ளார்.


இதனால் ஹீரமண்டி தொடரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *