கொரானா தொற்றிலிருந்து மீண்டு(ம்) பணிக்கு திரும்பிய ஆட்சியருக்கு உற்சாக வரவேற்ப்பு…!!!

கோவை:-

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் ராசாமணி.  கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியும், கட்டுப்பாடுகளை விதித்தும், அறிக்கைகளை வெளியிட்டும் வந்து தன்னை கொரோனா பணியில் ஈடுபடுத்தி மக்களை காக்கும் பணியில் தன்னை முன்மாதியான ஆட்சியராக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், அவருக்கு சில நாட்களுக்கு முன்னர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.  இதனால் அவர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.  இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது  இதனை தொடர்ந்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அவரது உடல்நிலை சீரானதும் மீண்டும் வீட்டிற்க்கு வந்து தன்னை தனிமை படுத்தி கொண்டார்.

மேலும் பூரண குணமடைந்ததை அடுத்து இன்று தனது பணியை துவங்கினார், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவருக்கு மாவட்ட வருவாய் துறை அலுவலர் இராம துரை முருகன் மலர் கொத்து குடுத்து உற்சாகமாக வரவேற்றார், மேலும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் ஆட்சியர் இராசாமணிக்கு மலர் சென்டுகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.