மீண்டும் மத்திய இணைய மைச்சராக பொறுப் பேற்றிரு க்கும் சகோதரர் திரு. எல்.முரு கன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்து – தினகரன்!!

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எல்.முருகனுக்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மீண்டும் மத்திய இணையமைச்சராக பொறுப் பேற்றிருக்கும் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவதோடு, தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும் மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *