விரைவில் படம் டைரக்ட் செய்வேன் – நடிகர் விஜய்சேதுபதி!!

விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. நேற்று ஐதராபாத்தில் உள்ள அபர்னா மாலில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அதில் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட் டியில், “மகாராஜா எனக்கு 50வது படமாக அமைந்தது மகிழ்ச்சி. சினிமாவில் எல்லோரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தை கற்று இருக்கிறேன். விமர்சனம், பாராட்டுகளை சமமாகவே பார்க்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் துபாயில் வேலை பார்த்தேன்.

பல வருடங்களுக்கு பிறகு துபாயில் புர்ஜ் கலிபாவில் எனது படத்தின் போஸ்டர் வந்த போது ஜெயிக்க வேண்டும் என்று துபாய் தெருக்களில் சுற்றியது தான் நினைவுக்கு வந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகும் ஒரு நடிகனாக எனக்கு நிறைவு ஏற்படவில்லை.

என்னை மக்கள் செல்வன் என்று அழைக்கும் போது கேட்க நன்றாக இருக்கிறது. 50 படங்களில் நடித்து விட்டேன். பல படங்களுக்கு எனக்கு முழுமையான சம்பளம் இன்னும் வர வில்லை.

காசோலை கூட பணம் இன்றி திரும்பி வந்து இருக்கிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதை நான் வரவேற்கிறேன். எனக்கு படம் இயக்க ஆர்வம் இருக்கிறது. விரைவில் படம் டைரக்ட் செய்வேன்

ரசிகர்கள் தொலைவில் இருந்து வர வேண்டி இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நான் ரசிகர்கள் சந்திப்பு நடத்துவது இல்லை” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *