ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தியே.. – உண்மை கண்டறியும் குழு!!

தமிழ்நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகின. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அதனால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருப்பதாக ஒரு அட்டவணை படம் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் வதந்தியே.. இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை.

வதந்திகளை நம்பாதீர்கள் என்று உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது .

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *