சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட். விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவுக்கு கட்சி மாறிய நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக விளங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தாரகை 91 ஆயிரத்து 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் தாரகை கத்பர்ட். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற தாரகை கத்பர்ட், சபாநாயகர் அப்பாவு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.