குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த நிலையில் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
குவைத் நாட்டில் மங்காப் நகரில் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு. ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு: கொச்சி விமான நிலையத்திற்கு 7 பேரின் உடல்களும் வந்ததும், தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
உடல்களை பெறுவதற்காக 8 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ள தமிழ்நாடு அரசு