காஞ்சிபுரம் ;
கோவில் நகரம் என அழைக்கக்கூடிய காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த காஞ்சி மாநகரம் கோவில் நகரமாக அழைக்கப்படுகிறது, இந்த வழியில் திருஞானசம்பந்தர் நடந்து சென்றதால் இதற்கு பிள்ளையார் பாளையம் என அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது, தமிழ்நாட்டிலே ஐந்து பாடல் பெற்ற தளம் இங்கு தான் உள்ளது.
சிவஞான முனிவர் கட்சியப்பா முனிவர் வாழ்ந்த ஊர் இந்த ஊர், அம்பாள் பூஜை செய்த இடம் இந்த ஊர் என கூறினார். இந்நிலையில் நித்தியானந்தாவை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு
நித்தியானந்தாவை மடத்தை விட்டு நீக்கி ஆச்சு அப்படி வந்தாலும் நான் விடமாட்டேன். அவர் நாட்டுக்குள் வந்தாலே அரெஸ்ட், அரெஸ்ட் பண்ணிடுவாங்க என்றார் .
செய்தியாளர் இடைத்தேர்தலை பற்றி கேள்வி எழுப்பிய போது ,
இடைத்தேர்தல் என்பது நல்லது தான். இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும், இல்லாவிட்டால் பாமகவும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு, அதிகம் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என தெரிவித்தார்.