(18.6.2024 முதல் 24.6.2024 வரை) இந்த வார விசேஷங்கள்!!

18-ந்தேதி (செவ்வாய்)

  • சர்வ ஏகாதசி.
  • திருக்கோளக்குடி சிவபெருமான் கயிலாய வாகனத்தில் உலா.
  • திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
  • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
  • சமநோக்கு நாள்.

19-ந்தேதி (புதன்)

  • கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா. இரவு புஷ்ப சப்பரம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் ஊஞ்சல் சேவை.
  • கீழ்நோக்கு நாள்.

20-ந்தேதி (வியாழன்)

  • திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதர் காட்சி.
  • திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தன் தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் பவனி.
  • சமநோக்கு நாள்.

21-ந்தேதி (வெள்ளி)

  • பவுர்ணமி.
  • காரைக்கால் அம்மை யார் மாங்கனி திருவிழா.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம்.
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.
  • சமநோக்கு நாள்.

22-ந்தேதி (சனி)

  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
  • திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்தில் உலா.
  • மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி.
  • கீழ்நோக்கு நாள்.

23-ந்தேதி (ஞாயிறு)

  • திருத்தங்கல் அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக் கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
  • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
  • கீழ்நோக்கு நாள்.

24-ந்தேதி (திங்கள்)

  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
  • திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்தி லும். தாயார் பூப்பல்லக் கிலும் பவனி.
  • மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
  • மேல்நோக்கு நாள்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *