கோவையில் மூடப்படாத பாதாளச் சாக்கடையில் பெண் விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டது.
இருப்பினும் சில இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே காணப்பட்டன. இது குறித்து பொதுமக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும் மாநகராட்சி மாநகராட்சிக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவ்வழியே நடந்த பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடையை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்துள்ளார். கால் எலும்பில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காந்திபுரம் உதவி செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.