”முதல்முறை வாக்காளர்கள் ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்க ளியுங்கள்” – முதல்வர் ஸ்டாலின் !!

முதல்முறை வாக்காளர்கள் ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்கு செலுத்தினார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!

அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்!

நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்… என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *