மக்களவைத் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டத்தை விருதுநகர் தொகுதியில் தேமுதிக விஜய பிரபாகரன் நடத்தினார். அப்போது பேசிய அவர் , உங்க முன்னாடி எம்.பி.,யா வரணும்னு நினைச்சேன். ஆனா இப்ப விஜய பிரபாகரனா வந்து நிக்கிறேன். தோல்வியை தழுவி விட்டோம். இல்லையென்றால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
மக்களவைத் தேர்தலில் நாடே உற்றுப் பார்த்த தொகுதியாக விருதுநகர் தொகுதி இருந்தது இரவு 11 மணி வரை வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இழுப்பறி இருந்தது. இருந்தாலும் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது இந்த விருதுநகர் மக்கள் தான். எனக்கு வாக்களித்து அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக -தேமுதிக வலுவான கூட்டணி அமைத்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ஒழிப்போம் என்றார்கள். ஆனால் ஒழிக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்று போலியான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றார்.