விஜயகாந்த் மறைவு – அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!!

விஜயகாந்த் மறைவு – அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.அவருக்கு வயது 71. விஜயகாந்தின் உடல் தற்போது தேமுதிக தலைமை கழகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி மரியாதை நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை கழகமான கோயம்பேட்டில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் மறைவையொட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தவர். மனிதநேய பண்பாளர், தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்தினார்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply