அன்பு நண்பரை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!!

அன்பு நண்பரை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!!

அசாத்தியமான, மன உறுதி உள்ள மனிதர் விஜயகாந்த்; அவரை இழந்தது மிகப்பெரிய ஒரு துரதிருஷ்டம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பரை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

உடல்நலம் தேறிவிடுவார் என நம்பினோம். அவர் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். தமிழ்நாட்டு மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

Leave a Reply