“அயலகத் தமிழர் தினம் – 2024” விழா – மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மருந்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

“அயலகத் தமிழர் தினம் – 2024” விழா – மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மருந்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை :
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் “அயலகத் தமிழர் தினம் – 2024” விழாவில் “எனது கிராமம்” என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள், 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் அயலகத் தமிழர்கள் 8 பேருக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

 • தமிழ்நாடும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறபோது, எனக்கு என்ன குறை.
 • மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மருந்து.
 • என் சக்தியையும் மீறி உழைத்துக்கொண்டே இருப்பவன் நான்.
 • எனக்கு உடல்நலம் சரியில்லை என எழுதி இருந்ததை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
 • உலகமே வளம் பெற அயலக தமிழர் மாநாடு நடந்து வருகிறது.
 • தேர்தல் அறிக்கையில் கூறியபடி அயலக தமிழர் நலத்துறை கொண்டு வரப்பட்டது.
 • “முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்” என்பதே தமிழர்கள் கடல் கடந்து கோலோச்ச காரணம்.
 • தமிழர் இணைய கல்வி கழகம் மூலம் வெளிநாடு வாழ் தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் கல்வி
 • வெளிநாடு வாழ் தமிழர்கள் இங்குள்ள நில பிரச்சனையை தீர்க்க டிஜிபி அலுவலகத்தில் தனிப்பிரிவு
 • பிற மாநிலங்களில் பேரிடர்களில் சிக்கும் தமிழர்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள்
 • அயலக தமிழர்களின் குறைகளை களைய உடனுக்குடன் நடவடிக்கை
 • எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள் என்று அயலக தமிழர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply