தெய்வங்களில் விநாயகர் வித்தியாசமானவர்!!

தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாய் வணங்கப்படப் படுபவர் விநாயகர். அதனால் தான் அவரை “முதல் கடவுள்” என்கிறோம்.

ஒரு காலத்தில் “கணாதிபத்யம்” என்ற பெயரில் தனி சமயமாக விநாயகர் வழிபாடு இருந்தது.

அனைத்து தெய்வங்களின் வழிபாடு ஒருங்கிணைக்கப்பட்ட போது தனக்கென உள்ள ஆலயத்தில் முதன்மை தெய்வமாகவும், சிவன் கோவில்களில் பரிவார தெய்வமாகவும், பெருமாள் கோவில்களில் பாதுகாப்பு தெய்வமாகவும் விநாயகர் வணங்கப்படுகிறார்.

விநாயகருக்கு ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி விழா பிரசித்திமானது.

இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ந்தேதி (சனிக்கிழமை) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் திங்கட்கிழமை பிறந்தவர்.

அன்று அவருக்கு நடத்தப்படும் வழிபாடுகள் வித்தியாச மானவை. ஏனெனில் விநாயகரே வித்தியாசமானவர்தான்.

அவரது உருவத் தோற்றம் மனித உடல் யானை தலையுடன் வித்தியாசமானது. அவரை தோப்பு கரணம் போட்டு, தலையில் குட்டி நாம் செய்யும் வழிபாடு வித்தியாசமானது.

அவருக்காக செய்யப்படும் விதம், விதமான அலங்காரங்கள் வித்தியாசமானவை.

அவருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் வித்தியாசமானவை. மொத்தத்தில் விநாயகர் வழிபாடு வித்தியாசங்கள் நிறைந்ததாக இருப்பது தெரியும்.

விநாயகரை எந்த இடத்திலும் நிறுவி வழிபடலாம். எந்த அளவிலும் செய்து வழிபடலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *