”சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கிய சூர்யா”!!

தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான கங்குவா ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10- ந்தேதி திரைக்கு வர உள்ளது.

இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அந்த படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். Dassault Falcon 2000 என்கிற இந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடி ரூபாய் ஆகும்.

இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம். ஏற்கனவே தமிழ் திரையுலகில் தனி விமானம் வைத்திருப்பவர்களின் பட்டியலில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் திரையுலகில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் பரவி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *