இந்தியா – வங்கதேச ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற எதிரான டெஸ்ட் தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து கான்பூரில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரின் மூலம் ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சாதனையை படைக்கவுள்ளார். நியூசிலாந்து ஜாம்பவான் பேட்டர் மெக்கல்லத்தின் நீண்ட கால சாதனையை முறியடிக்க இந்திய அணியின் ஜெய்வாலுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
1 சிக்சர் விளாசினால் ஸ்டோக்சையும் 8 சிக்சர் விளாசினால் மெக்கல்லத்தையும் பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் முதல் இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்து சாதனை படைப்பார்.
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:-
வீரேந்தர் சேவாக்- 22 சிக்சர்கள் (2008)
கில்கிறிஸ்ட் -22 சிக்சர்கள் (2005)
பென் ஸ்டோக்ஸ் – 26 சிக்சர்கள் (2022)
ஜெய்ஸ்வால் -26 சிக்சர்கள் (2024)
மெக்கல்லம் -33 சிக்சர்கள் (2014)